11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
'என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
2.
மொழிமுதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
3.
4.
ஐங்குறுநூற்றுப்பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்கள் ஆகியவற்றினை அட்டவணைப்படுத்துக.
5.
பனைமரத்தின் பயன்கள் யாவை?
6.
Winners don’t do different things, they do things differently.
7.
A picture is worth a thousand words
8.
கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
நிகழ்ச்சி நிரல்
"அரியன கேள் புதியன செய்" ( திங்கள் கூருகை)
9.
'சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையை' என்னும் தலைப்பில் மேடைபேச்சிற்கான உரையை உருவாக்குக,
10.
"தமிழ்" என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. 'இனிமையும் நீர்மையும் தமிழெனல்' ஆகும் என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. 'தமிழ்' என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.
'அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்' என்ற புறநானூற்றுப் பாடலடியில் 'தமிழ்' எனும் சொல் மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் 'பல்கலைப் புலமை' என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. 'தமிழ்கெழு கூடல்' என்றவிடத்திலும் “கலைப்புலமை' என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன் 'தமிழ் தழிஇய சாயலவர்' என்னும் இடத்து, “தமிழ்” என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.
தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் 'தமிழ்', பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன “தமிழ் இவை பத்துமே”, (மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுக்களாலான திருப்பாவையை ஆண்டாள் 'தமிழ்மாலை' என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். (பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்).
தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை?
11.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) தோய்த்து
1.
(i) இளமைப்பருவத்தில் என் நாவை அசைத்துமே மழலையெனும் குழலிசையை வளர்த்த மொழி, என்னுயிர் தமிழ்மொழி என்பேன்.
(ii) அறிவெனும் கண்களை அகலத்திறந்து வைத்து, உலகோடு கலந்து உறவாடச் செய்த மொழி.
(iii) மங்காத செல்வமாம் சங்க இலக்கியத்தை வாரி என் முன்னே வைத்திட்ட நன்பொழி.
(iv) கம்பனும் இளங்கோவும், தம்மிரு தோள்களில் தூக்கி எனை வைத்து வளர்த்திடச் செய்த மொழி. இலக்கணத்தோணியாம் நன்னூலில் எனை ஏற்றி இலக்கியக்கடலினில் உலவிடச் செய்த மொழி, தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தமென அருள்நூல்கள் ஒளியேற்றி வழிகாட்டச் செய்த மொழி.
(v) செம்மொழிக்கு உரியதெனும் பதினொரு கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னிகர் இல்லா மொழி என்னுயிர் தமிழ்மொழி என்பேன்.
2.
பன்னிரண்டு உயிரெழுத்துகளும் ௧, ச, த, ந, ப, ம, வ, ய ஞ, ங ஆகிய பத்து உயிர் ஏறிய மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும். (எ-டு) : அணி, ஆடை, இலை, ஈகை, உரல், ஊசல், எடு, ஏடு, ஐயம், ஒன்று, ஓடம், ஒளவை.
(எ-டு) : கனி, காவல், கிளி, கீரை, குயில், கூடு, கெடு, கேடு, கை, கொடு, கோவில், கெளவை.
சங்கு, சால்பு, சிலை, சீற்றம், சுருள், சூழ்ச்சி, செறு, சேய், சையம் (பொருள்), சொல், சோறு, செளரியம் (வீரம்).
தளிர், தாழ்வு, திரு, தீமை, துன்பம், தூற்று, தெரு, தேவை, தையல், தொழில், தோகை, தெளவை
நன்றி, நாடு, நிழல், நீர், நுங்கு, நூல், நெகிழ்ச்சி, நேயம், நைதல், நொய்ம்மை, நோய், நெளவி (மான்).
பழம், பாவை, பிடி, பீர்க்கு, புதுமை, பூமி, பெருமை, பேழை, பைய, பொழில், போக்கு, பெளவம் (கடல்.
மண், மான், மின், மீன், முதுமை, மூன்று, மென்மை, மேன்மை, மையல், மொக்கு, மோழை, மெளவல் (அரும்பு),
உயிர் பன்னிரண்டும் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய மெய் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றுமாக இருபத்து நான்கு எழுத்துகள் தமிழில் மொழிக்கு ஈற்றில் வரும்.
உயிர் தனித்தும் மெய்யோடு சேர்ந்தும் மொழிக்கு ஈற்றில் வரும்.
(எ-டு) : ஆ, ஈ, ஊ, ஏ; ஐ, ஒ, ஒள. ௮, இ, ௨, ௭, ஒ. (உயிர் தனித்து ஈறாயின) விள, பலா, கரி, தீ, கடு, பூ, சே௭, தே, தை, நொ, போ, வெள - உயிர், மெய்யோடு சேர்ந்து ஈறாயின,. உறிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், தமிழ், வாள் - மெய் ஈறாயின. எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.
3.
4.
திணை - முல்லைத்திணை.
முதற்பொருள் : நிலம் - காடும் காடு சார்ந்த இடமும், சிறுபொழுது - மாலை; பெரும்பொழுது - கார்காலம்.
கருப்பொருள் : தெய்வம் - திருமால். மக்கள் - குறும்பொறை, நாடன், பறவை - காட்டுக்கோழி. மலர் - முல்லை. விலங்கு - மான், முயல். உணவு - வரகு, சாமை.
5.
மனித சமுதாயத்திற்கு அளிக்கும் பயன்
பனைமரம் சிறந்த காற்றுத்தடுப்பான்.
இது, ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மை கொண்டது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையாது.
மதிப்புக்கூட்டுப் பொருள்கள்
பனையிலிருந்து நேரடியாய்க் கிட்டும் பதநீரை மக்கள் பருகுகின்றனர்.
நுங்கைத் தின்று மகிழ்கின்றனர்.
மிகுந்த வருவாய் ஈட்டும் நோக்கில் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்களை உருவாக்கி விற்கின்றனர்.
6.
வெற்றியாளர்கள் மாறுபட்ட பொருள்களை செய்யமாட்டார்கள். ஆனால், அவர்கள் பொருள்களை வித்தியாசமாய்ச் செய்வார்கள்.
7.
ஆயிரம் சொற்களைவிட ஒரு படம் உயர்ந்தது.
8.
அனுப்புநர் சென்னை -14,
மாணவர் தலைவர், 15-6-2018.
அ.மே.நி. பள்ளி,
இராயப்பேட்டை,
சென்னை - 14,
பெறுநர் .
முதன்மை ஆசிரியர்,
'காலை உதயம்' நாளிதழ்,
சென்னை - 2.
மதிப்பிற்குரியீர் !
வணக்கம். திங்கள்தோறும் எங்கள் பள்ளியில் இலக்கியக்கூட்டம் நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். அவ்வண்ணமே, கடந்த புதனன்று எங்கள் பள்ளியில் இலக்கியக்கூட்டம் மாலை 2-30 மணியளவில் தொடங்கியது. முதலில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று, அமைதியாய்த் தமிழ்த்தாய்க்குத் தம் வணக்கத்தைச் செலுத்தினர். பின்பு, மாணவர் இலக்கியச்செல்வன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அடுத்து, அ.மே.நி. பள்ளித் தலைமையாசிரியர் திரு, எழிலன் அவர்கள் இலக்கியக்கூட்டத்துக்குத் தலைமை ஏற்று உரையாற்றினார். அவர் தம் உரையில், மாணவர்கள் பள்ளியில் பாடம் பயில்வதோடு மட்டும் இருந்துவிடக்கூடாது; இதுபோன்ற இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுபவரின் சீரிய கருத்துகளைச் செவியேற்று, உள்ளத்தில் பதித்துக்கொள்ள வேண்டும் என நல்லுரை வழங்கினார்.
அடுத்து, நாடறிந்த நற்கவிஞர் வாணி அவர்கள், “புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் ஓர் அரிய சொற்பொழிவாற்றினார். அவர், தமிழர்களின் கடந்த கால வாழ்க்கை நிலை, தமிழர்கள் தமிழகத்தை விட்டு எதற்காகப் புலம் பெயர்ந்து சென்றனர், இன்று அவர்களின் வாழ்க்கை எந்நிலையில் அமைந்துள்ளது என்பன போன்ற பல செய்திகளைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். அப்பேச்சைக் கேட்ட மாணவர்களின் முகத்தில் வியப்புக்குறி, அச்சவுணர்வு, கோபக்குறி எனப் பல நிலைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. அவை பேச்சாளரின் பேச்சு வன்மைக்குக் கிடைத்த பாராட்டு மாலைகள் எனலாம்.
சிறப்புப்பேச்சாளர் தம் உரையினை 3-45 மணி அளவில் நிறைவு செய்தார். பின், மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணோடு 4 மணி அளவில் கூட்டம் நிறைவு பெற்றது.
தயவுசெய்து தாங்கள் இச்செய்தியினைத் தங்கள் நாளிதழில் வெளியிட்டு எம் பள்ளிக்கு மதிப்பளிக்குமாறு வேண்டுகிறேன்.
இங்ஙனம்,
ந. வெற்றிவேல்
9.
1. பெரியோர்களே ! பெருமைசால் பெண்மக்களே ! அனைவருக்கும் வணக்கம்,
2. இன்று நான், சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்னும் தலைப்பில் பேசவிருக்கிறேன்.
3. இயற்கையாய் அமைந்த ஐம்பூதங்களுள் ஒன்றுதான் நிலம். அந்த நிலத்தில் நாம் செய்யும் தொழிலே, வேளாண்மையாகும். இயற்கை எப்போதுமே தன்னோடு இயைந்து 4. வாழ்பவர்க்கே நன்மை அளிக்கும். நாம் இந்நிலைக்கு மாறாய்ச் செயல்பட்டதால் மனித நலமே பாழ்பட்டு உள்ளது. ஆம்; நாம் மிகுந்த விளைச்சலைப் பெற வேண்டும் நோக்கில் யூரியா, பாஸ்பேட் போன்ற செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தியதால் நிலம் பாழ்பட்டது. அந்த நிலத்தில் விளைந்த பயிர்களை உண்ட உயிரிகளின் நலமும் பாழ்பட்டது; ஆகவே, முதலில் அந்த நிலத்தைப் பாதுகாத்தல் வேண்டும்.. நிலத்தை எப்படிப் பாதுகாப்பது?
4. அறுவடை முடிந்த பிறகு, வைக்கோலைச் சமமாய்ப் பரப்பி, மடியச்செய்து, மறுபருவம் வந்தவுடன் நிலத்தில் நீரைத் தேக்கி உழ வேண்டும். மேலும், உரச்செடிகளை வளர்த்து, அவற்றை மடக்கி உழுது உரமாய் அளிக்கலாம்; நிலத்தில் கிட்டும் செடி, செத்தைகளை மீண்டும் நிலத்திற்கே தரவேண்டும். இச்செயல்கள் பயிர்கள் வளர்வதற்கான வளத்தைப் பூமிக்கு அளிக்கும்.
5. இங்கு ஒரு வினா எழலாம். யூரியா போன்ற செயற்கை உரங்கள் வேண்டாமெனில், எதை உரமாய் இடுவது என்று சிலர் கேட்பர். அதற்குப் பதில், தொழு உரத்தை இட வேண்டும் என்பதுதான்.
6. தொழுஉரம் என்றால் என்ன? மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றைக் கலந்து, அதை வைக்கோலோடு சேர்த்து மக்கச்செய்து நன்செய் நிலத்துக்கு இடலாம். புன்செய் நிலமாய் இருந்தால் அதில், காய்ந்த இலைச்சருகு, சாணத்தை எரிப்பதனால் கிட்டும் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து இடலாம்.
7. அதேபோல், பனை மரங்களையும் நிலத்தில் வளரச்செய்தால், அவை சிறந்த காற்றுத் தடுப்பானாய்ப் பயன்படும்; நிலத்தில் நீர் மட்டம் குறையாமல் தண்ணீரைச் சேமித்து வைக்கும்.
8. இவ்வாறு நாம் பயன்படுத்துகிற உரம், மருந்து ஆகியன எல்லாம் இயற்கையாய் இருப்பது சுற்றுச் சூழலைக் காப்பதற்கான வழியன்றோ?
9. எனவே, நமது சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்.
10.
தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் இனிமை, நீர்மை, பண்பாடு, அகப்பொருள், பல்கலைப்புலமை, கலைப்புலமை, அழகு, மென்மை, பாட்டு ஆகியனவாம்.
11.
(அ) தோய்த்து = தோய் + த் + த் + ௨
வா (வ) பகுதி ('வ' எனக் குறுகியது விகாரம்)
த் - சந்தி
த் - இறந்தாலஇடைநிலை
உ - வினையெச்ச விகுதி
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards