11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
தீயினால் சுட்டதைப் 'புண்' என்றும் நாவினால் சுட்டதை 'வடு' என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
3.
ஐங்குறுநூறு - நூற்குறிப்பு தருக.
4.
5.
ஐங்குறுநூற்றுப்பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்கள் ஆகியவற்றினை அட்டவணைப்படுத்துக.
6.
ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் முல்லைநில இயற்கை அழகை விவரிக்க.
7.
'சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையை' என்னும் தலைப்பில் மேடைபேச்சிற்கான உரையை உருவாக்குக,
8.
'யானை டாக்டர்' கதைவாயிலாய் இயற்கை, உயிரினப்பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
9.
மண்ணுக்கு வளம் சேர்ப்பன -
மண்புழு
ஊடுபயிர்
இயற்கை உரங்கள்
இவை மூன்றும்
10.
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
(அ) மதிப்புக் கூட்டுப்பொருள்கள் (ஆ) நேரடிப்பொருள்கள்
அ - மட்டும் சரி
ஆ - மட்டும் சரி
இரண்டும் சரி
அ - தவறு, ஆ - சரி
11.
பிழையான தொடரைக் கண்டறிக.
பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றன.
ஏதிலிக் குருவிகள் என்பவை வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகள் ஆகும்.
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனைமூலம் அறிய முடியும்.
12.
கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம் பெற்ற மரபு .......
பெயர்மரபு
வினைமரபு
ஒலிமரபு
இவை மூன்றும்
13.
14.
தமிழகத்தின் மாநில மரம் எது?
அரசமரம்
பனைமரம்
ஆலமரம்
வேப்பமரம்
15.
யானை டாக்டர் என்னும் புதினத்தின் ஆசிரியர் ___________
எஸ். இராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சிவராமன்
சு. வேணுகோபால்
16.
'உழவர் உலகிற்கு அச்சாணி' எனக் கூறியவர் _________.
பாரதி
பாரதிதாசன்
ஒளவையார்
திருவள்ளுவர்
17.
'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்னும் நூலின் ஆசிரியர் __________
நம்மாழ்வார்
ஆர்-ஸ். நாராயணன்
மசானபு ஃபுகோகா
பாமயன்
18.
மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது _________
பனைமரம்
இயற்கை உரம்
சாணத்தை எரித்த சாம்பல்
உளுந்தின் வேர்முடிச்சு
1.
2.
(i) ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண், உடலில் விரைந்து ஆறாவிட்டாலும் உள்ளத்தில் ஆறிவிடும்.
(ii) ஆனால், நாவினால் ஒருவனைப் புண்படும்படி பேசியது, என்றும் அவன் மனத்தில் ஆறாத் தழும்பாய் இருக்கும்.
(iii) அதனால் வள்ளுவம், தீயினால் சுட்டதைப் புண் என்றும், நாவினால் சுட்டதை வடு என்றும் குறிப்பிடுகிறது.
3.
(i) ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு.
(ii) மூன்றடி சிற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
(iii) ஐந்து திணைகளையும், ஐந்நூறு பாடல்களையும் கொண்டது.
(iv) ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
(v) இந்நூலைத் தொகுத்தவர், கூடலூர்க்கிழார். தொகுப்பித்தவர், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.
4.
5.
திணை - முல்லைத்திணை.
முதற்பொருள் : நிலம் - காடும் காடு சார்ந்த இடமும், சிறுபொழுது - மாலை; பெரும்பொழுது - கார்காலம்.
கருப்பொருள் : தெய்வம் - திருமால். மக்கள் - குறும்பொறை, நாடன், பறவை - காட்டுக்கோழி. மலர் - முல்லை. விலங்கு - மான், முயல். உணவு - வரகு, சாமை.
6.
(i) ஐங்குறுநூற்றுப் பாடலில் இடம்பெறும் காடும் காடுசார்ந்த நிலமும் “முல்லை நிலம்', கார்காலம் வந்து விட்டமையால் காயா, கொன்றை, நெய்தல், முல்லை ஆகியவற்றின் மொட்டுகள் இதம் விரிக்கச் செம்முல்லை, பிடவம் என்னும் தாவர வகைகள் பூத்துக் குலுங்கிக் காட்சியளிக்கின்றன.
(ii) அந்த முல்லை நிலத்தின் இயற்கை அழகைக் கண்ட தலைவன், தான் திரும்புவதாகக் கூறிப் பிரிந்து சென்ற கார்காலம் வருவதற்குமுன் தான் வந்து விட்டதைத் தலைவிக்கு உணர்த்த எண்ணி, அவற்றைப் பார்த்து மகிழ்ந்து, விரைந்து ஆட வருமாறு தலைவியை அழைக்கிறான்.
(iii) இல்லறம் சிறக்கப் பொருள் தேடித் தலைவன் வேற்றார் செல்வதைச் சங்கப் பாடல்கள் பேசும், தலைவன் திரும்பி வருவதற்குரிய காலத்தை, மக்கள் வாழ்வோடு இயைந்த மலர்கள் மலர்ந்து தலைவிக்கு அறிவிப்பதனை, ஐங்குறுநூற்றுப் பாடல் உணர்த்துகிறது.
7.
1. பெரியோர்களே ! பெருமைசால் பெண்மக்களே ! அனைவருக்கும் வணக்கம்,
2. இன்று நான், சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்னும் தலைப்பில் பேசவிருக்கிறேன்.
3. இயற்கையாய் அமைந்த ஐம்பூதங்களுள் ஒன்றுதான் நிலம். அந்த நிலத்தில் நாம் செய்யும் தொழிலே, வேளாண்மையாகும். இயற்கை எப்போதுமே தன்னோடு இயைந்து 4. வாழ்பவர்க்கே நன்மை அளிக்கும். நாம் இந்நிலைக்கு மாறாய்ச் செயல்பட்டதால் மனித நலமே பாழ்பட்டு உள்ளது. ஆம்; நாம் மிகுந்த விளைச்சலைப் பெற வேண்டும் நோக்கில் யூரியா, பாஸ்பேட் போன்ற செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தியதால் நிலம் பாழ்பட்டது. அந்த நிலத்தில் விளைந்த பயிர்களை உண்ட உயிரிகளின் நலமும் பாழ்பட்டது; ஆகவே, முதலில் அந்த நிலத்தைப் பாதுகாத்தல் வேண்டும்.. நிலத்தை எப்படிப் பாதுகாப்பது?
4. அறுவடை முடிந்த பிறகு, வைக்கோலைச் சமமாய்ப் பரப்பி, மடியச்செய்து, மறுபருவம் வந்தவுடன் நிலத்தில் நீரைத் தேக்கி உழ வேண்டும். மேலும், உரச்செடிகளை வளர்த்து, அவற்றை மடக்கி உழுது உரமாய் அளிக்கலாம்; நிலத்தில் கிட்டும் செடி, செத்தைகளை மீண்டும் நிலத்திற்கே தரவேண்டும். இச்செயல்கள் பயிர்கள் வளர்வதற்கான வளத்தைப் பூமிக்கு அளிக்கும்.
5. இங்கு ஒரு வினா எழலாம். யூரியா போன்ற செயற்கை உரங்கள் வேண்டாமெனில், எதை உரமாய் இடுவது என்று சிலர் கேட்பர். அதற்குப் பதில், தொழு உரத்தை இட வேண்டும் என்பதுதான்.
6. தொழுஉரம் என்றால் என்ன? மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றைக் கலந்து, அதை வைக்கோலோடு சேர்த்து மக்கச்செய்து நன்செய் நிலத்துக்கு இடலாம். புன்செய் நிலமாய் இருந்தால் அதில், காய்ந்த இலைச்சருகு, சாணத்தை எரிப்பதனால் கிட்டும் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து இடலாம்.
7. அதேபோல், பனை மரங்களையும் நிலத்தில் வளரச்செய்தால், அவை சிறந்த காற்றுத் தடுப்பானாய்ப் பயன்படும்; நிலத்தில் நீர் மட்டம் குறையாமல் தண்ணீரைச் சேமித்து வைக்கும்.
8. இவ்வாறு நாம் பயன்படுத்துகிற உரம், மருந்து ஆகியன எல்லாம் இயற்கையாய் இருப்பது சுற்றுச் சூழலைக் காப்பதற்கான வழியன்றோ?
9. எனவே, நமது சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்.
8.
இயற்கைப் பாதுகாப்பு
ஒரு நாட்டின் வளம் காட்டுவளத்தினைப் பொறுத்தே அமையும் என்பர். காடு செழித்தால் நாடு செழிக்கும்.
அடர்ந்த காடுகளில் யானை, சிங்கம், புலி, மான் முதலான விலங்குகள் வாழ்கின்றன; பல்வேறு வகையான பறவைகளும் வாழ்கின்றன.
நோய் தீர்க்கும் மூலிகைகள், தேன் போன்றவற்றை நாம் காட்டிலிருந்தே பெறுகின்றோம். சந்தன மரம், தேக்கு மரம், மூங்கில் போன்றவை விளைவதும் காட்டில்தான். காட்டு மரங்கள் காற்றிலுள்ள தூசை அகற்றித் தூய்மைப்படுத்துகின்றன; தட்பவெப்ப நிலையைச் சமப்படுத்துகின்றன. காட்டிலுள்ள மரங்கள்தாம் மேகங்களைக் குளிர்வித்து மழையாகப் பெய்யச் செய்கின்றன.
இப்படிப் பல வகைகளில் நன்மை அளிக்கும் காட்டை மனிதன் தன் சுயநலத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறான்.
மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றுடன் ஆறுகளின் வளம் காத்து, இயற்கை வளங்கள் குறையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு, நெகிழிப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடுதல் போன்ற செயல்களால் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
உயிரினப் பாதுகாப்பு
சுற்றுலா செல்வதாய்க் கூறிக்கொண்டு பலர் காட்டில் நுழைந்து, மதுவைக் குடித்துவிட்டு அலட்சியமாய் அதன் குப்பியைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர். உடைந்த அக்குப்பியின் பகுதிகள் யானையின் காலில் பதிந்து, நாளடைவில் அதன் உடற்பகுதியிலே தங்கிப் புண் ஏற்படச்செய்து அதற்குப் பெருந்துன்பம் இழைத்துவிடுகின்றன.
பாதுகாக்கப்பட்ட காடுகளில் வாழும் உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்க அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
விலங்குகளைத் தந்தம், தோல், இறைச்சி போன்றவைகளுக்காக வேட்டையாடுவது தொடர்ந்தால் விலங்கு மற்றும் பறவை இனங்கள் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.
எனவே, அரசு உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விலங்கு மற்றும் பறவை இனங்களை காத்திட வேண்டும்.
நாழும் இயற்கை வளங்களை அழித்திடாமல் காத்திடுவோம். மழைவளம் பெருகிட, பொறுப்பினை உணர்ந்து செயல்படுவோம்.
9.
(d)
இவை மூன்றும்
10.
(a)
அ - மட்டும் சரி
11.
(c)
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
12.
(c)
ஒலிமரபு
13.
(c)
14.
(b)
பனைமரம்
15.
(b)
ஜெயமோகன்
16.
(d)
திருவள்ளுவர்
17.
(c)
மசானபு ஃபுகோகா
18.
(d)
உளுந்தின் வேர்முடிச்சு
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards