7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு டிராக்ட ர் வண்டிச் சக்கரத்தின் ஆரம் 77 செ.மீ எனில், அது 35 முறை சுற்றும்போது, கடக்கும் தொலைவைக் காண்க. (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
2.
கடிகாரத்தில், 56 மி.மீ நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவைக் கணக்கிடுக.(இங்கு π = \(\frac { 22 }{ 7 } \))
3.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
4.
ஆரம் 14 செ.மீ உடைய வட்டத் தகட்டின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
5.
படத்தில் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)
6.
ஒரு வட்டப் பூங்காவின் சுற்றளவு 352 மீ எனில், அந்தப் பூங்காவின் பரப்பளவு காண்க.
7.
ஒரு பூந்தோட்டத்தின் மையத்தில் அமைந்த நீர் தெளிப்பான், வட்ட வடிவப் பகுதியில் நீரைத் தெளிக்கிறது. நீர் தெளிக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு 1386 செ.மீ2 எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.
8.
2.135 மீ ஆரமுள்ள குண்டு எறிதல் வளையத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.
9.
105 செ.மீ விட்டமுள்ள வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு காண்க.
10.
63 மீ ஆரமுள்ள வட்ட வடிவில் ஒரு ரோஜாத் தோட்டம் உள்ளது. அதன் தோட்டக்காரர், மீட்டருக்கு ரூ.150 வீதம் செலவு செய்து, அத்தோட்டத்திற்கு வேலி அமைக்க விரும்புகிறார் எனில், அதற்கு ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
11.
1320 செ.மீ நீளமுள்ள ஒரு கம்பி, 7 செ.மீ ஆரமுள்ள வட்டங்களாக மாற்றப்படுகிறது எனில், எத்தனை வட்டக்கம்பிகளை உருவாக்க முடியும் எனக் கணக்கிடுக.
12.
ஒரு விளையாட்டுத் திடல், 350 மீ விட்டத்துடன் கூடிய வட்ட வடிவில் உள்ளது. ஓர் ஓட்டப்பந்தய வீரர், அத்திடலை நான்கு முறை சுற்றி வருகிறார் எனில், அவர் கடந்த தொலைவைக் கணக்கிடுக.
13.
ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ. அது 150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவைக் காண்க?
14.
ஒரு வட்டக் கிணற்றின் விட்டம் 4.2 மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க?
15.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆர ஆளவுகள் உடைய வட்டத்தின் சுற்றளவைக் காண்க.
91 மி.மீ
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆர ஆளவுகள் உடைய வட்டத்தின் சுற்றளவைக் காண்க.
49 செ.மீ
17.
வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
d = 28 மி.மீ
18.
வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
d = 56 மீ
19.
வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
d = 70 செ.மீ
20.
பின்வரும் அட்டவணையிலுள்ள வட்டங்களுக்கு அதன் விடுபட்ட ஆரம் (r) , விட்டம் (d) மற்றும் சுற்றளவு (C) காண்க .
| வ. எண் | ஆரம் (r) | விட்டம் (d) | சுற்றளவு (C) |
| (i) | 15 செ.மீ | ||
| (ii) | 1760 செ.மீ | ||
| (iii) | 24 மீ |
21.
வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.
4\(\pi \)r2
\(\pi \)r2
2\(\pi \)r2
\(\pi \)r2 + 2r
22.
வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்
அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு
அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு
23.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு
41 செ. மீ
82 செ. மீ
21 செ. மீ
20 செ. மீ
24.
C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது
சுற்றளவு
பரப்பளவு
சுழற்சி
ஆரம்
25.
ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்
2\(\pi \)r அலகுகள்
\(\pi \)r2 + 2r அலகுகள்
\(\pi \)r2 சதுர அலகுகள்
\(\pi \)r3 கன அலகுகள்
26.
கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. (\(\pi =\frac { 22 }{ 7 } \))
27.
154 மீ சுற்றளவு உள்ள ஒரு வட்ட வடிவப் பூங்காவைச் சுற்றி ஒரு தோட்டக்காரர் நடக்கிறார். அதனைச் செப்பனிடச் சதுர மீட்டருக்கு ரூ. 25 வீதம் ஆகும் மொத்த செலவு யாது? (\(\pi =\frac { 22 }{ 7 } \) என்க)
28.
ஒரு வட்டத்தின் பரப்பளவு 2464 செ.மீ2. அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. ( \(\pi =\frac { 22 }{ 7 } \) என்க)
29.
28 செ.மீ விட்டமுள்ள சாகச வளை யத்தின் (hula loop) பரப்பளவைக் காண்க \((\pi =\frac { 22 }{ 7 } \) = 22 என்க)

30.
ஆரம் 21 செ.மீ அளவுள்ள வட்டத்தின் பரப்பளவு காண்க. (\(\pi \) = 3.14 என்க)
1.
ஒரு சுழற்சியில் கடக்கும் தொலைவு = வட்டத்தின் சுற்றளவு
= 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \) x 77
= 2 x 22 x 11
= 484 செ.மீ
எனவே , ஒரு சுற்றில் கடக்கும் தொலைவு = 484 செ.மீ
35 சுற்றில் கடக்கும் தொலைவு = 484 x 35 = 16940 செ.மீ
2.
இங்கு, வினா டி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவு என்பது வட்டத்தின் சுற்றளவையும், வினாடி முள்ளின் நீளம் என்பது அவ்வட்டத்தின் ஆரத்தையும் குறிக்கிறது. மேலும் ஆரம் r = 56 மி.மீ.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \) x 56
= 2 x 22 x 8
= 352 மி.மீ
ஆகவே வினாடி முள்ளின் முனை , 1 நிமிடத்தில் கடக்கும் தொலைவு 352 மி.மீ.
3.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
\(\frac { C }{ 2\pi } \) = r
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சுற்றளவு = 132 மீ
r = \(\frac { 132 }{ 2\times \frac { 22 }{ 7 } } \)
=\(\frac { 132 }{ 2 } \times \frac { 7 }{ 22 } \)
எனவே , ஆரம் r = 21 மீ
விட்டம் d = 2r
= 2 x 21
= 42 மீ
4.
வட்டத்தகட்டின் ஆரம் (r) = 14 செ.மீ
அதன் சுற்றளவு = 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \)x 14
= 88 செ.மீ
5.
கொடுக்கப்பட்டது, d = 6 செ.மீ, ஆனா ல், d = 2r = 6 செ.மீ, r = 3 செ.மீ
வட்டத்தின் சுற்றளவு = 2πr அலகுகள்
= 2π x 3
= 18.8496 ≃ 18.84
எனவே , சுற்றளவு 18.84 செ.மீ ஆகும்.
6.
கொடுக்கப்பட்ட வட்டப் பூங்காவின் சுற்றளவு 352 மீ
2\(\pi\)r = 352
\(2\times \cfrac { 22 }{ 7 } \times r=352\)
\(r=352 \times \frac{1}{2} \times \frac{7}{22}\)
r = 56 மீ
வட்டப் பூங்காவின் பரப்பளவு = \({ \pi r }^{ 2 }\) சதுர அலகுகள்
\(=\frac{22}{7} \times \ 56 \times 56\)
= 22 x 8 x 56
வட்டப் பூங்காவின் பரப்பளவு = 9856 மீ2
7.
நீர் தெளிக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு = 1386 செ.மீ
\({ \pi r }^{ 2 }=1386\)
\( \frac{22}{7} \times r^{2} =1386 \)
\(r^{2} =1386 \times \frac{7}{22}\)
r2 = 63 x 7
= 3 x 3 x 7 x 7
=(3 x 7)2
r = 3 x 7 = 21 செ.மீ
விட்டம் d = 2r
= 2 x 21
= 42 செ.மீ
8.
ஆரம் r = 2.135 மீ
குண்டு எறிதல் வளையத்தின்பரப்பளவு
= \({ \pi r }^{ 2 }\)
= 3.14 x 2.135 x 2.135
= 14.326 மீ2
9.
விட்டம் (d) = 105 செ.மீ
\(r=\frac{105}{2}\)
வட்ட மேசையின் பரப்பளவு = \(\pi\)r2 சதுர அலகுகள்
\(=\frac{22}{7} \times \frac{105}{2} \times \frac{105}{2}\)
\( =\frac{11 \times 15 \times 105}{2} \)
வட்ட மேசையின் பரப்பளவு = 8662.5 செ.மீ
10.
r = 63 மீ
தோட்டத்தின் சுற்றளவு (வேலியின் நீளம்)
= 2\(\pi\)r அலகுகள் = \(2 \times \frac{22}{7} \times 63=396\) மீ
1 மீட்டருக்கு வேலி அமைக்க ஆகும் செலவு
= ரூபாய்150
39 மீட்டருக்கு வேலி அமைக்க ஆகும் செலவு
= ரூ 150 x 396
= ரூ 59,400
11.
கம்பியின் நீளம் = 1320 செ.மீ
வட்டக்கம்பியின் சுற்றளவு = 2\(\pi\)r அலகுகள்
\(=2 \times\frac{22}{7} \times 7\)
= 44 செ.மீ
மொத்த வட்டக்கம்பிகளின் எண்ணிக்கை

= 30
30 வட்டக்கம்பிகளை தயாரிக்க முடியும்.
12.
d = 350 மீ
ஒரு சுற்று =விளையாட்டுத் திடலின் சுற்றளவு
= \(\pi\)d
\(=\frac{22}{7} \times 350\)
= 1100 மீ
ஓட்டப்பந்தய வீரர் கடந்த
தொலைவு = 4 x ஒரு சுற்று
= 4 x 1100 மீ
= 4400 மீ
13.
d = 1.4 மீ
ஒரு முறை சுழலும்போது சுற்றளவு
= சக்கரத்தின் சுற்றளவு
= \(\pi\)d
\(=\frac{22}{7} \times 1.4\)
ஒரு முறை சுழலும்போது கடக்கும் தொலைவு = 4.4 மீ
150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவு = 4.4 x 150 = 660 மீ
14.
கிணற்றின் விட்டம் d = 4.2 மீ
கிணற்றின் சுற்றளவு = \(\pi d\)
\(=\frac{22}{7} \times 4.2\)
வட்டக் கிணற்றின் சுற்றளவு = 13.2 மீ
15.
ஆரம் r = 91 மி.மீ
சுற்றளவு \(C=2\pi r\)
சுற்றளவு = 572 மி.மீ
16.
ஆரம் r = 49செ.மீ
சுற்றளவு \(C=2\pi r\)
சுற்றளவு = 308 செ.மீ
17.
d = 28 மி.மீ
சுற்றளவு \(C=\pi d\)
சுற்றளவு = 88 மி.மீ
18.
d = 56 செ.மீ
சுற்றளவு \(C=\pi d\)
சுற்றளவு = 176 மீ
19.
d = 70 செ.மீ
சுற்றளவு \(C=\pi d\)
சுற்றளவு = 220 செ.மீ.
20.
(i) ஆரம் r = 15 செ.மீ
விட்டம் d = 2r = 2 x 15 = 30 செ.மீ
சுற்றளவு C = 2πr
= \(2\times \cfrac { 22 }{ 7 } \times 15=\cfrac { 660 }{ 7 } \) செ.மீ
விட்டம் = 30 செ.மீ
= 94.28 செ.மீ
(ii) சுற்றளவு C = 1760 செ.மீ
\(2\pi r=1760\)
\(2\times \cfrac { 22 }{ 7 } \times r=1760\)
r = 280 செ.மீ
விட்டம் d = 2r = 2 x 280
d = 560 செ.மீ
(iii) விட்டம் d = 24 மீ
2r = 24மீ
= \(\cfrac { d }{ 2 } =\cfrac { 24 }{ 2 } =12\) மீ
சுற்றளவு \(C=2\pi r\)
= \(2\times \cfrac { 22 }{ 7 } \times 12\)
= \(\cfrac { 528 }{ 7 } =75.42\) மீ
= 75.42மீ
21.
(b)
\(\pi \)r2
22.
(b)
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
23.
(a)
41 செ. மீ
24.
(d)
ஆரம்
25.
(a)
2\(\pi \)r அலகுகள்
26.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் பரப்பளவு = 9856 ச.மீ
\(\pi \)r2 = 9856
\(\frac { 22 }{ 7 } \) x r2 = 9856
r2 = 9856 x \(\frac { 7 }{ 22 } \)
r2 = 448 x 7 = 3136
r2 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 7 x 7
r2 = 8 x 8 x 7 x 7 = 82 x 72 = (8 x 7)2
r = 8 x 7 = 56 மீ
ஆகவே , தேவையான கயிற்றின் நீளம் 56 மீ.

27.
அவர் நடந்த தோலைவு என்பது, அந்த வட்டத்தின் சுற்றளவுக்குச் சமமாகும். நடந்த தொலைவு 154 மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே,
வட்டத்தின் சுற்றளவு = 154 மீ
அதாவது, 2\(\pi \)r = 154
2 x \(\frac { 22 }{ 7 } \) x r = 154
r = 154 x \(\frac { 7 }{ 44 } \)
r = 3.5 x 7
= 24.5
வட்ட வடிவப் பூங்காவின் பரப்பளவு = \(\pi \)r2 சதுர அலகுகள்
= \(\frac { 22 }{ 7 } \) x 24.5 x 24.5
= 22 x 3.5 x 24.5
= 1886.5 மீ2
ஒரு சதுர மீட்டர் பரப்பளவு பூங்காவைச் சமன்படுத்த ஆகும் செலவு = ரூ.25.
எனவே, 1886.5 ச.மீ பூங்காவைச் சமன்படுத்த ஆகும் செலவு
= 1886.5 x 25 = ரூ. 47,162.50
28.
வட்டத்தின் பரப்பளவு = 2464 செ.மீ2
\(\pi \)r2 = 2464
\(\frac { 22 }{ 7 } \) x r2 = 2464
r2 = 2464 x \(\frac { 7 }{22 } \)
r2 = 112 x 7 = 784
r2 = 2 x 2 x 2 x 2 x 7 x 7
= 4 x 4 x 7 x 7
= 42 x 72
r2 = (4 x 7)2 [r x r = (4 x 7) x (4 x 7)]
r = 4 x 7
= 28 செ.மீ
விட்டம் (d) = 2 x r = 2 x 28 = 56 செ.மீ.

29.
கொடுக்கப்பட்ட விட்டம் (d) = 28 செ.மீ
ஆரம் (r) = \(\frac { 28 }{ 2 } \) = 14 செ.மீ
வட்டத்தின் பரப்பளவு = \(\pi \)r2 ச. அலகுகள்
= \(\frac { 22 }{ 7 } \) x 14 x 14
ஆகவே, வட்டத்தின் பரப்பளவு = 616 செ.மீ2
30.
ஆரம் (r) = 21 செ.மீ
வட்டத்தின் பரப்பளவு = \(\pi \)r2 ச. அலகுகள்
= 3.14 x 21 x 21
= 1384.74
= 1384.74 செ.மீ2
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards