7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
கீழ்க்காணும் பட ங்களில் உள்ள நிழலிடபட்ட பகுதியினைப் பின்னமாகவும் தசம எண்ணாகவும் குறிப்பிடுக.
(i)
(ii)
(iii)
2.
கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
\(\frac { 9 }{ 1000 } \)
3.
கீழ்க்கண்டவற்றைத் தசம எண்ணாக எழுதுக.
நானூற்று நான்கு, நூறில் ஐந்து
4.
ஒரு மாத்திரையானது 0.85 மி.கி. மருந்தைக் கொண்டுள்ளது.
5.
பாஸ்கல் முக்கோணத்தில் ஒவ்வொரு வரிசையிலுள்ள எண்களின் கூட்டுத் தொகை ஓர் அமைப்பை ஏற்படுத்துமா?
6.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
2523
7.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
4631
8.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் காண்க.
47
9.
பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் காண்க.
4917
10.
கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. (\(\pi =\frac { 22 }{ 7 } \))
1.
| எண் | நிழலிடப்பட்ட பகுதி | பின்னம் | தசம எண் |
| (i) | 100 சதுரங்களில் 9 சதுரங்கள் | \(\frac { 9 }{ 100 } \) | 0.09 |
| (ii) | 100 சதுரங்களில் 18 சதுரங்கள் | \(\frac { 18 }{ 100 } \) | 0.18 |
| (iii) | 100 சதுரங்களில் 99 சதுரங்கள் | \(\frac { 99 }{ 100 } \) | 0.99 |
2.
\(\frac { 9 }{ 1000 } \) இல் பத்தில் ஒன்று, நூறில் ஒன்றின் இடமதிப்பு பூஜ்ஜியம்
எனவே , \(\frac { 9 }{ 1000 } \) = 0.009.
3.
நானூற்று நான்கு, நூறில் ஐந்து
= 404 + \(\frac { 5 }{ 100 } \)
= 404 + 0x\(\frac { 1 }{ 10 } \) + 5x\(\frac { 1 }{ 100 } \) = 404.05
4.
0.85 = 0 + \(\frac { 8 }{ 10 } \) + \(\frac { 5 }{ 100 } \)
= \(\frac { 85 }{ 100 } \) = \(\frac { 17 }{ 20 } \)
\(\frac { 17 }{ 20 } \) மி.கி. மருந்து ஒரு மாத்திரையில் உள்ளது.
5.
ஒவ்வொரு வரிசையும் அந்தந்த வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதல் வரிசை = 21 − 1 = 1
2ஆம் வரிசை = 22 − 1 = 2 x 1 = 2
3ஆம் வரிசை = 23 − 1 = 2 x 2 = 4
4ஆம் வரிசை = 24 − 1 = 2 x 2 x 2 = 8
5ஆம் வரிசை = 25 − 1 = 2 x 2 x 2 x 2 = 16
6ஆம் வரிசை = 26 − 1 = 2 x 2 x 2 x 2 x 2 = 32
7ஆம் வரிசை = 27 − 1 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 = 64
8ஆம் வரிசை = 28 − 1 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 = 128
இங்கு x என்பதை வரிசைகளின் எண்ணிக்கையாகவும், y என்பதை வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகையாகவும் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.
| x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | ... |
| y | 1 | 2 | 4 | 8 | 16 | 32 | 64 | 128 | ... |
x மற்றும் y இக்கு இடையே உள்ள தொடர்பு y = 2x – 1 என்பதாகும்.
6.
2523 இன் அடிமானம் 25 இன் ஒன்றாம் இலக்கம் 5 மற்றும் இதன் அடுக்கு 23. எனவே , 2523 இன் ஒன்றாம் இலக்கம் 5 ஆகும்.
7.
4631 இன் அடிமானம் 46 இன் ஒன்றாம் இலக்கம் 6. இதன் அடுக்கு 31 (மிகை முழுக்கள்). எனவே, 4631 இன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
அடிமானம் 4 இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்.
41 = 4 (ஒற்றைப்படை அடுக்கு )
42 = 4 x 4 = 16 (இரட்டைப்படை அடுக்கு)
43 = 4 x 4 x 4 = 16 x 4 = 64 (ஒற்றைப்படை அடுக்கு)
44 = 64 x 4 = 256 (இரட்டைப்படை அடுக்கு)
45 = 256 x 4 = 1024 (ஒற்றைப்படை அடுக்கு)
46 = 1024 x 4 = 4096 (இரட்டைப்படை அடுக்கு)
மேற்கூறியவற்றில் இருந்து, அடிமானம் 4 இல் முடியும் அடுக்கு எண்களின் விரிவின் ஒன்றாம் இலக்கம் 4 அல்லது 6 ஆக உள்ளது. மேலும், கூர்ந்து நோக்கினால், அடுக்கு ஒற்றை எண்ணாக இருக்கும்போது அதன் ஒன்றாம் இலக்கம் 4 ஆகவும், அடுக்கு இரட்டை எண்ணாக இருக்கும்போது அதன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகவும் உள்ளது.
இதேபோல், அடிமானத்தின் ஒன்றாம் இலக்கம் 9 ஆக இருக்கும்போது,
91 = 9 (ஒற்றைப்படை அடுக்கு)
92 = 9 x 9 = 81 (இரட்டைப்படை அடுக்கு)
93 = 9 x 9 x 9 = 81 x 9 = 729 (ஒற்றைப்படை அடுக்கு)
94 = 729 x 9 = 6561 (இரட்டைப்படை அடுக்கு)
95 = 6561 x 9 = 59049 (ஒற்றைப்படை அடுக்கு)
96 = 59049 x 9 = 531441 (இரட்டைப்படை அடுக்கு)
அடிமானம் 9 இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கமானது, அடுக்கு ஒற்றைப் படையாக இருக்கும்போது 9 ஆகவும், இரட்டைப்படையாக இருக்கும்போது, 1 ஆகவும் இருக்கும்.
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, அடுக்கு எண்ணின் அடிமானம் [(10இன் மடங்கு)+4] அல்லது
[(10இன் மடங்கு)+9] என்னும் வடிவில் இருக்கும்போது, இந்த விதி பொருந்தும்.
உதாரணமாக, 2412 இன் அடிமானம் 24 இன் ஒன்றாம் இலக்கம் 4 மற்றும் அதன் அடுக்கு 12 (இரட்டைப்படை எண்)
எனவே , 2412 இன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
இதேபோல், 8921 ஐக் கருதுக. 8921 இன் அடிமானம் 89 இன் ஒன்றாம் இலக்கம் 9 மற்றும் அதன் அடுக்கு 21 (ஒற்றைப்படை எண்).
எனவே , 8921 இன் ஒன்றாம் இலக்கம் 9 ஆகும்.
அடிமானம் 4 இல் முடியும் அடுக்கு எண்களின் விரிவின் ஒன்றாம் இலக்கமானது அடுக்கு
ஒற்றைப்படையாக இருக்கும்போது 4 ஆகவும், இரட்டைப்படை எண்ணாக இருக்கும்போது 6 ஆகவும் இருக்கும் என்ற முடிவினைப் பெறலாம்.
இங்கு, 4 மற்றும் 6 ஆகிய எண் இணைகளும், 9 மற்றும் 1 ஆகிய எண் இணைகளும், 10இன் நிரப்பிகளாக உள்ளன என்பதை நினைவில் கொள்க.
8.
47
அடிமானம் 4 இன் ஒன்றாம் இலக்கம் 4 மற்றும் அடுக்கு 7 (ஒற்றைப்படை எண்)
எனவே , 47 இன் ஒன்றாம் இலக்கம் 4 ஆகும்.
9.
4917
அடிமானம் 49 இன் ஒன்றாம் இலக்கம் 9 மற்றும் அடுக்கு 17 (ஒற்றைப்படை எண்)
எனவே, 4917 இன் ஒன்றாம் இலக்கம் 9 ஆகும்.
எண் 2, 3, 7 மற்றும் 8 இல் முடியும் அடிமானத்தை உடைய அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் கண்டுபிடிக்க, பின்வரும் செயல்பாடானது உதவிகரமாக இருக்கும்.
10.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் பரப்பளவு = 9856 ச.மீ
\(\pi \)r2 = 9856
\(\frac { 22 }{ 7 } \) x r2 = 9856
r2 = 9856 x \(\frac { 7 }{ 22 } \)
r2 = 448 x 7 = 3136
r2 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 7 x 7
r2 = 8 x 8 x 7 x 7 = 82 x 72 = (8 x 7)2
r = 8 x 7 = 56 மீ
ஆகவே , தேவையான கயிற்றின் நீளம் 56 மீ.

7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards